Wednesday 24 April 2024

ஸ்ரீ சித்தானந்தா சரணம்

சற்றே நீளமான பதிவு.  மேலும், இந்தப் பதிவை முழுமையாக படித்து முடிக்கும் போது உங்களுக்கு பல்வேறு மனநிலை தோன்றலாம்.  கோபம் வரலாம்; எரிச்சல் தோன்றலாம்.  ஒருவேளை, இந்தப் பதிவை எழுதிய நான் அருகில் இருந்தால் நான்கு அறை விடலாம் என்று கூட தோன்றும்.  ஆனால், அத்தனை மன மாச்சரியங்களையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்.

 பல்வேறு சித்தர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஏன், பழனி மலையில் வீற்றிருக்கும் அந்தக்  கோவணாண்டியை உருவாக்கி, பிரதிஷ்டை செய்தவரும் ஒரு சித்தர்தான்.  நவபாஷாணங்களைக் கொண்டு போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மூலவருக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இன்று பலரும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் ஜோதிடம் என்ற கலையுமே புலிப்பாணி என்ற சித்தர் உருவாக்கியதாக சொல்கிறார்கள்.  சித்தர்கள் மொத்தம் பதினெட்டு பேர் என்று சொல்லப்படுகிறது.  அந்த சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாகவும், அவர்களை அத்தனை எளிதாக யாரும் பார்த்து விட முடியாது என்றும் சொல்கிறார்கள்.  பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சொல்லப்படும் அந்த சித்தர்களில், அசத்திய விலக்க  சித்தர் என்ற ஒரு சித்தரைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

இந்த சித்தரின் சன்னிதானம், நாகருக்கு ஆலயம் கொண்ட நாகர்கோவிலிலிருந்து சுமார் 342 கிலோமீட்டர்கள் தென்கிழக்காக பயணம் செய்தால் சென்றடையலாம்.  சற்றே கடினமான பாதை என்பதால் நல்லதொரு நம்பகமான வாகனம் வேண்டும்.  இந்த சித்தரின் சன்னதியில் வழங்கப்படும் ஒரு சிறப்பு பிரசாதம் பல்வேறு அற்புதங்கள் கொண்டது.  

அசத்திய விலக்க சித்தரின் பெயரிலேயே அவரின் சிறப்பு சொல்லப்படுகிறது.  இவரின் சிறப்பு பிரசாதம் பெற்றவர்கள் பொய்யை, பொய் பேசுபவர்களை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். (அ சத்தியம் - பொய்) அது மட்டுமன்றி மாற்று கருத்து கொண்டோரை கிள்ளுக் கீரையாக நினைத்து மிரட்டல் மற்றும் நக்கல் மூலம் அவர்களை அடக்கிவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு நல்லறிவு கிட்டும்.  முக்கியமாக சங்கிகளுக்கு நல்லதொரு சாப விமோசன ஸ்தலம் இது.  மோடி என்ற பொய் பிம்பத்தை நம்பிக்கொண்டிருப்போருக்கு அது ஒரு மண் குதிரை என்பதை எடுத்துரைக்கும்.  மொத்தத்தில் படிப்பறிவிருந்தும், அறிவிலியாய் போனோருக்கு உண்மை எடுத்துரைக்கும் அற்புத ஸ்தலம் இது.

(பின் குறிப்பு: நாகர்கோவிலில் இருந்து தென் கிழக்காக 342 கிலோமீட்டர் அப்படின்னு சொன்ன உடனே புரிஞ்சுகிட்டு யாராவது சுதாரித்திருந்தால் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  ஏன்னா அது நடுக்கடல்)