Saturday 10 December 2016

இந்த நாடும் ...........

ஒரு ஊருல ராசா ஒருத்தர் இருந்தாராம்.   இன்னைக்கு நாம சொல்லுற எதேச்சதிகாரம், சர்வாதிகாரம் எல்லாத்துக்கும் உதாரண புருஷனாம். அவரோட ஒரு கட்டளைதான் மக்களோட அதிருப்திக்கு முக்கிய காரணமாம். அது என்னன்னா நாட்டுல இருக்குற எல்லாரும் தெனமும் ஒரு படி அரிசிய அரண்மனையில குடுத்துட்டு, ஒரு படி நெல்ல வாங்கிக்கிட்டு போணும்னு ஒரு உத்தரவு போட்டிருந்தாராம்.  இப்பிடி ஒரு உத்தரவால ஊரெல்லாம் அந்த ராசாவ கரிச்சுக் கொட்டிகிட்டு இருந்ததாம்.  

எல்லா மகாராசனுக்கும் வாற மாதிரி, இந்த ராசாவுக்கும் இறுதிக்காலம் வந்திருச்சு.  படுத்த படுக்கையா கெடக்காரு;  இந்த நெலமையில மனுஷனுக்கு புத்தி வந்துருச்சு.  அடுத்து ராசாவாகப் போற மகனக் கூப்பிட்டாரு. "எப்பா மகனே, நான் புத்தி கேட்டுப் போயி இப்பிடி ஒரு உத்தரவு போட்டு கெட்ட பேரு வாங்கிட்டேன்.  அத மாத்தி இந்த ஊரு என்னய  நல்லவன்னு சொல்லுற மாதிரி ஒரு காரியம் நீதான் பண்ணனும்.  அத எப்பிடிப் பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.  எனக்கு நல்ல பேரு வாங்கிக் குடுக்குறது உன்னோட கடம", ன்னு சொல்லிட்டு கண்ண மூடிட்டாரு.

மகனும் ராசாவானான்.  மொத நாளு மொத உத்தரவு போட்டான் - இன்னையிலிருந்து எல்லாரும், தெனமும்  ஒரு படி அரிசிய அரண்மனையில குடுத்துட்டு ஒரு படி உமி வாங்கிக்கிரனும்னு.  கெடச்சுது பாரு அப்பனுக்கு பேரு, "புள்ளையவுட அப்பன் நல்லவன்டா" - ன்னு.

எனக்கென்னமோ தமிழ் நாட்டுல ஒவ்வொரு தடவ ஆட்சி மாறும்போதும், மேல சொன்ன கத தான் ஞாபகத்துக்கு வருது.

இந்த நாடும் நாட்டு மக்களும் ....................


Monday 25 July 2016

சினி சித்தானந்த ஸ்வாமிகள் சிறப்புப் பேட்டி

நிருபர்:   வணக்கம் நேயர்களே, சினிமா ரசிகப் பெருமக்களே.  சினி       சித்தானந்த  ஸ்வாமிகள் இன்றைக்கு  நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக இங்கே எழுந்தருளியுள்ளார்.  சமீபத்தில் வெளி வந்த கபாலி திரைப்படம் நன்று என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற அதே  நேரத்தில்,  படம் மொக்கை என்றும், இல்லையில்லை செம மொக்கை என்றும் ஊடகங்கள் கழுவி ஊத்திக்கொண்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.  எனவே அது குறித்த ஸ்வாமிகளின் கருத்துக்களை  உங்கள்முன் வைப்பதில் பெரு 'மகிழ்ச்சி' அடைகிறேன்.                                                                                                                                                                                                                 ஸ்வாமிகள்: ஓம் சினி சித்தானந்தாய நமஹ.  உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த 'மகிழ்ச்சி.'  கேள்விகளை கேட்கலாம்.                                                                                                                                                                                                           நிருபர்:   சுவாமி இந்த திரைப்படம் குறித்த தங்களின் கருத்து என்ன?                                                                                                                                                                                       ஸ்வாமிகள்:   லோகத்திலே, சினிமான்னு எடுக்கறவா எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலே  மொக்கை குடுக்கறது  நடக்கறதுதான்.  எண்ணெய் பொறுத்தவரைக்கும் இந்தப் படம் மொக்கைன்ற வகையிலதான் வர்றது.  அலைபாயற  திரைக்கதையும், எதை சொல்லப்போறோம்ன்ற சரியான முடிவில்லாததும்தான் காரணம்.  மெட்ராஸ் அப்படின்ற சிறப்பான படம் கொடுத்த டைரக்டர்ட்ட இருந்து இப்படி ஒரு மொக்கையை எதிர்பார்க்கலை. ஆனானப்பட்ட மணி ரத்னமே  ராவணன்னு மொக்கை கொடுக்கலையா.  உலகநாயகன் உத்தம வில்லன்னு மொக்கை கொடுக்கலையா.                                                                                                                                                                                               நிருபர்:   இந்தப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பாக்கணும்ங்கிற குறிக்கோள் காரணமா சிலர் இன்சால்வேன்சி  குடுக்கற அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறாங்கன்னு பரவலா பேசிக்கிறாங்க.  இது பத்தி....                                                                                                                                                                                   ஸ்வாமிகள்:    விமானத்தில் விளம்பரம், நட்சரத்திர ஓட்டல்ல சிறப்புக் காட்சின்னு ஓவர் பில்டப் கொடுக்கறச்சேயே, உஷாரா இருந்துருக்கணும்.  அதை விட்டுட்டு பர்சனல் லோன் போட்டு டிக்கெட் வாங்கறதெல்லாம் பண்ணினா இன்சால்வேன்சிதான்.                                                                                                                                                                                                                                                             நிருபர்:      இந்த கபாலி தோஷம் பத்தி....                                                                                                                                                                                                                                                    ஸ்வாமிகள்:    அதோன்னும்  பெரிய தோஷம் இல்ல. இதுக்கு எளிதான பரிகாரம் உண்டு.  சூப்பர் ஸ்டாரோட classic  அல்லது superhit  படம் ஒண்ணெ  உடனே பாத்துறது  நல்லது.  உதாரணமா முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், பாட்ஷா, படையப்பா இப்படி படங்கள்ல ஒண்ண  பாத்தா போதும்.  குறிப்பா இந்த படங்களும் யூடூப்பிலயே கெடைக்கிறாதால செலவில்லாத தோஷப்பரிகாரம்னு சொல்லலாம்.                                                                                                                                                                                       நிருபர்:     மிக்க நன்றி சுவாமி.  நேயர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பா மீண்டும் நன்றி.                                                                                                                                                                                                                                                                                                                         ஸ்வாமிகள்:     'மகிழ்ச்சி'.  ஓம் சினி சித்தானந்தாய நமஹ.

Sunday 24 July 2016

நெருப்புடா - விமர்சனம் அல்ல

ஒரு மாபெரும் கொள்ளை மீண்டும் அரங்கேறியிருக்கிறது - சட்டப்பூர்வமாக, ஆட்சியாளர்களின் ஆசியுடன்;  வியர்வை சிந்தி - அல்லது A/c ரூமில் உட்கார்ந்து மூளையை கசக்கி - சம்பாதித்த பணத்தை உங்கள் பையிலிருந்து உங்கள் அனுமதியுடன் கொள்ளையடித்திருக்கிறார்கள் - உங்கள் அனுமதியுடன்.                                                                                                                                                                                                                                                                                       திரைதுறைங்கிறது  பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை.  திரையில்  பெயர் வராத எத்தனையோ திறமையாளர்கள், தொழிலாளர்கள் உழைத்து மெருகேற்றி ஒரு தனி மனிதனை நாயகனாக மாற்றுகிறார்கள்.  அத்தனை பேரின் உழைப்பையும் உறிஞ்சிக் குடித்து, கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை சம்பளமாக வாங்கிக்  கொண்டு, அந்த நாயகன் தன் திறமைகளை camera  முன் காட்டுகிறான்.       அவனும் குறிப்பிட்ட திறமை, பண்பு இருந்ததால்தான் அந்த உயரத்தை எட்டிப் பிடித்தான் என்பதில் மாற்றுக்  கருத்தில்லை.                                                                                                                                                                                                                                                                                     ஆனால், அதை சந்தைப்படுத்தும் சாக்கில், பொது மக்களின் சட்டைப்பையை குறி வைக்கும் coporate மனநிலைதான் இங்கே நாம் சாட வேண்டிய ஒன்றாகி விட்டது.  குறிப்பிட்ட படம் நிச்சயம் நம்மை மகிழ்விக்கப் போகிறது என்ற உறுதிப்பாடு இல்லாத நிலையில், தாறுமாறாக கட்டணத்தை நிர்ணயிப்பதும், அதை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதும் - ஹும் ... ஜன(பண)நாயகம் வாழ்க.                                                                                                        

Friday 22 July 2016

என்னய்யா ஆச்சு இந்த நாட்டுக்கு.  ஒருத்தர் CIA கூட சேந்துக்கிட்டு அமெரிக்காவை காப்பாத்த போயிட்டாரு - விஸ்வரூபம்;

இன்னொருத்தரு மலேசியாவை காப்பாத்தப் போயிட்டாரு - கபாலி;

இப்போ எங்க இளைய தளபதி மட்டும்தான் தமிழ் நாட்டை காப்பாத்துறதுக்கு இருக்குற ஒரே நம்பிக்கை; தமிழ் இனமே தயாராகு - அடுத்ததாக இளைய தளபதியோட கல்லவ நேரப்பியே ஆகணும்.