Saturday 10 December 2016

இந்த நாடும் ...........

ஒரு ஊருல ராசா ஒருத்தர் இருந்தாராம்.   இன்னைக்கு நாம சொல்லுற எதேச்சதிகாரம், சர்வாதிகாரம் எல்லாத்துக்கும் உதாரண புருஷனாம். அவரோட ஒரு கட்டளைதான் மக்களோட அதிருப்திக்கு முக்கிய காரணமாம். அது என்னன்னா நாட்டுல இருக்குற எல்லாரும் தெனமும் ஒரு படி அரிசிய அரண்மனையில குடுத்துட்டு, ஒரு படி நெல்ல வாங்கிக்கிட்டு போணும்னு ஒரு உத்தரவு போட்டிருந்தாராம்.  இப்பிடி ஒரு உத்தரவால ஊரெல்லாம் அந்த ராசாவ கரிச்சுக் கொட்டிகிட்டு இருந்ததாம்.  

எல்லா மகாராசனுக்கும் வாற மாதிரி, இந்த ராசாவுக்கும் இறுதிக்காலம் வந்திருச்சு.  படுத்த படுக்கையா கெடக்காரு;  இந்த நெலமையில மனுஷனுக்கு புத்தி வந்துருச்சு.  அடுத்து ராசாவாகப் போற மகனக் கூப்பிட்டாரு. "எப்பா மகனே, நான் புத்தி கேட்டுப் போயி இப்பிடி ஒரு உத்தரவு போட்டு கெட்ட பேரு வாங்கிட்டேன்.  அத மாத்தி இந்த ஊரு என்னய  நல்லவன்னு சொல்லுற மாதிரி ஒரு காரியம் நீதான் பண்ணனும்.  அத எப்பிடிப் பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.  எனக்கு நல்ல பேரு வாங்கிக் குடுக்குறது உன்னோட கடம", ன்னு சொல்லிட்டு கண்ண மூடிட்டாரு.

மகனும் ராசாவானான்.  மொத நாளு மொத உத்தரவு போட்டான் - இன்னையிலிருந்து எல்லாரும், தெனமும்  ஒரு படி அரிசிய அரண்மனையில குடுத்துட்டு ஒரு படி உமி வாங்கிக்கிரனும்னு.  கெடச்சுது பாரு அப்பனுக்கு பேரு, "புள்ளையவுட அப்பன் நல்லவன்டா" - ன்னு.

எனக்கென்னமோ தமிழ் நாட்டுல ஒவ்வொரு தடவ ஆட்சி மாறும்போதும், மேல சொன்ன கத தான் ஞாபகத்துக்கு வருது.

இந்த நாடும் நாட்டு மக்களும் ....................