Saturday 18 May 2019

கேயாஸ் தியரி சிறு குறிப்பு


மோடி SBI  யில இருக்குற பணத்தையெல்லாம் வழிச்செடுத்து,  அதானிக்கு  கடனாக்  குடுத்து ஆஸ்திரேலியாவுல போயி சுரங்கம் தோண்ட ச்  சொல்லி அனுப்பிச்சாரு.  அந்த தொழிலதிபரும் ஆஸ்திரேலியா போயி, சுரங்கம் தோண்டுறேன், ரயில் பாதை போடுறேன்னு ஆரம்பிச்சாரா;  ஆஸ்திரேலியாவுல  கொஞ்சம் கொஞ்சமா புகைய ஆரம்பிச்சது.  இந்த அதானி திட்டத்துக்கு ஆதரவா, எதிர்ப்பா போராட்டமெல்லாம் நடக்குது.  இதுக்கிடையில, ஆஸ்திரேலியாவுல  தேர்தல் வந்துச்சு.  இந்த தேர்தல் எந்த ஊருல நடந்தாலும், உடனே நாலு பெரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கிட்டு, காமெரா முன்னால உக்காந்து பேசுறங்கள்ல;  அதே மாதிரி பேசுனா அத்தனை வல்லுனர்களும் லேபர் கட்சி தான் ஜெயிக்கும்னு அடிச்சு விட்டாங்க.  ஆனா, என்னாச்சுன்னா லேபர் கட்சி தோத்துப் போச்சு.  இப்ப அந்த வல்லுநர் எல்லாரும் மறுபடி நாற்காலி மேசை போட்டு ஆராய்ச்சி பண்ணி லேபர் தோத்ததுக்குக் காரணம் அதானி பிரச்சினைதான்னு முடிவு பண்ணுனாங்க.  அப்ப மொத்தத்துல லேபர் கட்சி தோத்ததுக்குக் அடிப்படைக் காரணம் யாருன்னு பதில் சொல்லுங்க நியாயமாரே.