Monday 9 January 2012

இடுக்கண் வருங்கால்

இடுக்கண் வருங்கால் நகுக-ன்னாரு  திருவள்ளுவரு. அது என்ன இடுக்கண்-னு சொன்னா, மனுஷனுக்கு வர்ற வேதனையும் சோதனையும்தான். என்னாடா இவரு வேதனைக்கும், சோதனைக்கும் சிரிக்கச் சொல்றாரே அப்பிடின்னு யோசிச்சேன்.  அப்புறந்தான் வெளங்கிச்சு மகிழ்ச்சி மட்டுமே நெறைஞ்ச வாழ்க்கை சபிக்கப் பட்ட வாழ்க்கை.  அது சரி, வேதனையுஞ் சோதனையும் வந்தா எப்புடி சிரிக்கிறது அப்புடின்னு யோசிச்சா, வாய்யா இடுக்கண்ணு, உன்னைய மாதிரி எத்தனை பேரப் பாத்திருப்போம்;  வா ஒரு கை பாக்கலாம் அப்பிடிங்கிற மனப்பான்மைதான் நகுக.

                                        அப்புடி ஒரு மனசு, பக்குவம் இல்லாதவன் என்ன பண்றது? வேதனையையும், சோதனையையும் எதிர்கொள்ற வலிமை மற்றும் பக்குவம் இல்லாத பய, அது ரெண்டையும் ஒரு package-ஆ வாங்கிக்கிற வேண்டியதுதான்.  அது எங்கே கெடைக்கும்னா, பரம்பொருள் storeல கெடைக்கும். ஊர் ஊருக்கு, தெருவுக்குத் தெரு பரம்பொருள் ஸ்டோர் இருக்கு;  ஆனா ஒரிஜினல் சரக்கு எங்க கெடைக்கும் அப்புடின்னு தேடிப்பாத்து வாங்கணும்.  நான்தான் பரம்பொருள் அப்புடின்னு சொல்லிட்டு package விக்கிறவன் உலக மகா பிராடு.  நான்தான் பரம்பொருளோட நேரடி agent அப்புடின்றவன் அடுத்த பிராடு.  இப்புடி ஒவ்வொருத்தனையா வடிகட்டி ஒரிஜினல் சரக்கு வாங்குறதுதான் நம்ம தெறம.  இல்லாட்டி கதவைத் திற காற்று வரட்டும் கதையாகிப் போகும்.  ஷ்ஷ்... அப்பாடா இப்பமே கண்ணைக் கட்டுதே.

Saturday 7 January 2012

vanakkam

வணக்கம் நண்பர்களே ,

நகரத்தானின் முதல் வலையுலக பிரவேசம்.   விரைவில் உங்களை சந்திக்கிறேன்.